Sunday 26 February 2017

ரசித்தலும் மெச்சுதலும்...

ரசித்தலும் மெச்சுதலும்....

ரசித்தல் வாழ்வின் யதார்தமான ஸ்வாரஸ்யம்.. மெச்சுதல் ஒரு மோகம். அதற்கென வயது வரம்போ பாலின வேறுபாடோ கிடையாது. ஏதோ ஒரு வகையில் நாம் அனைவரும் தன்னை தானே ரசித்து மெச்சக்கூடியவர்களே. நம்மை உந்திகொண்டே இருக்கும் விசையும் அதுவே.

ஆண்களின் மெச்சுதல் மோகம் பெரும்பாலும் அவர்களின் ஆளுமையை பொருத்ததே. நான் வல்லவன், வீரன், எனக்கு எல்லாம் தெரியும், இதுபோன்ற ஆளுமை சார்ந்த மோகத்திலே மூழ்கி கிடக்கின்றனர். பெரும்பாலும் எதிர்பாலரிடத்தில் அவர்களின் ஈர்ப்பில் அம்மா அக்கா போன்ற குடும்ப சாயம் பூசப்படுவதில்லை. யதார்தமா கலர்புல்லா இருக்குற எல்லாத்தையும் ரசிப்பாங்க ஆனால் மெச்சுதலில் மெச்சூரிட்டியை கோட்டை விட்டுருவாங்க. அங்கதான் அவங்களுக்கு ஆப்பே.

பெண்களின் ரசித்தல் மிக சிம்பிளானது.. தன் ரசனையில் முக்கியமா ஆண் ரசனையில் தன் தந்தையின் சாயலில் இருந்து சகோதர சாயம் வரை தேடுவார்கள். அது உளவியல், டிரெஸ், ஹேர் ஸ்டைல் இப்படி எதுவா வேண்டுமானாலும் இருக்கலாம். சின்ன சின்ன விஷயங்களிலும் அதிகம் ஆனந்தம் தேடி கொள்வார்கள்.. நெயில் பாலிஸ் அழகா இருக்கு என்பதே ஒரு நாள் முழுவதும் இன்பத்தை தரக்கூடியது. எதிர்பாலரை மெச்சுவதிலும் அதன் சூசகத்திலும் இவங்கள மிஞ்சமுடியாது.

சிறு வயதில் ஆண் பிள்ளைகளுக்கு இல்லாத மீசை தாடியின் மீது ஈர்ப்பு வருவது ஆளுமையின் மீதான காதலே. பெண் பிள்ளைகள் தாவனி கட்டி பார்பதும் நகம் வளர்பதும் அழகியல் சார்ந்த ஈர்ப்பே. இந்த ரசனை ஒரு பேன்டசி உலகை உருவாக்கும் மெச்சுதல் ஒரு ஸ்டிராய்டை உடலுக்குள் மூளை முடுக்கெல்லாம் செலுத்தும் அதுக்காகவே நாம் தலைமுதல் கால் வரை மெனக்கிடுறோம்.

ரசித்தலும் மெச்சுதலும் இல்லாத நிலையில் வாழ்க்கை ஸ்வாரஸ்யம் இழந்து ஈடுபாடில்லாது ரொம்ப மெக்கானிக்கலா போகும். அழகு, சிரிப்பு முதல் அழுகை வரை எல்லாத்திலும் நிரம்பி வழிகிறது அள்ளி பருகுங்கள்... திகட்டாதிருக்க மெச்சுங்கள்.

வாழ்வியலின் சுவையே ரசித்துலும் மெச்சுதலும்.. அதனில் சிறந்ததொரு போதை இல்லை... அழகை ஆராதியுங்கள் மெச்சுதலில் மெய் மறந்து முக்தி அடையுங்கள்.. பிறவிப்பலன் எய்துங்கள்.
சியர்ஸ்... ❤❤

Tuesday 21 February 2017

Hugs... 😍

Hugs... ❤😘

ஒருவர் மீதுள்ள அன்பையும் நம்பிக்கையையும் ஒரு மென்மையான ஹக்ஸின் வழியே எளிதாக கடத்திவிட முடியும். இருப்பினும் ஹக்ஸ் கொடுக்கள் வாங்களில் பின்தங்கியவர்களாக இருப்பது நம்ம கலாச்சார பின்னனியே..

ஹக்ஸ்யை பற்றிய உளவியலும் புரிதலும் அனுபவமும் நமக்கில்லை என்றால் மிகையாகாது... நார்த் இந்தியாவுல ஒரளவு நாம இந்த ஹக்ஸ் கலாச்சாரத்த பாக்க முடியும்... நம்ம சைடுல ரொம்ப ட்ரை... வெளிநாட்டின் கலாச்சாரத்தில் ஹக்ஸ் அன்பின் ஒரு யதார்தமான குறியீடு.. ஆனா நம்மிடத்தில் ஹக்ஸ், முத்தம், லவ் யூ இதெல்லாம் காமமாகவே பார்கப்படுகிறது..

கலாச்சாரத்தில் ஊரிப்போன நாம் மரபுசார்ந்த விஷயங்களை புனிதம் பூசி நல்லதென்றும் மற்றதெல்லாம் கண்ணியமில்லாதது எனவும் சாயம் பூசிக்கொள்கிறோம்.. ஹக்ஸ் என்றவுடன் வரும் ஹைப்பர் பீலிங்கையும் மேலோங்கும் திருட்டு எண்ணத்தையும் விட்டொழியுங்கள்..

குடும்பங்களில்கூட குழந்தைகளை கட்டிக்கொள்வதும் மனைவியை கட்டி அனைப்பதையும் தவிர வேறு எந்த விரைட்டிசும் இல்லை... அப்பா அம்மா என தொடங்கி பேமிலி ப்ரெண்ட்ஸ் என அன்பான ஒவ்வொரு உள்ளத்திற்த்கும் அள்ளி கொடுங்கள்.. தொடுதலில் உள்ள அன்பின் ஸ்பரிசத்தை கலாச்சாரத்தை சீரழிக்காது பரிமாரிக்கொள்வோம்.

குடுப்பவர் மனதிலும் வாங்குபவர் மனதிலும் எந்த கபடமும் இல்லா நிலையில் ஹக்ஸ் நல்லதே. இருகரம் விரித்து தெளிந்த சிந்தனையுடன் அன்பு நிறைந்த மனதுடன் வாரி வழங்குங்கள்... அன்பு வளரட்டும்.  

ஹக்ஸ் என்பது உணர்ச்சிகள் இல்லாது உணர்வுகளை அன்பின் வழியாக கடத்தும் குறியீடு என்பதை உணர்ந்த ஒவ்வொரு நெஞ்ஜங்களுக்கும் ஹக்ஸ் & சியர்ஸ்... ❤❤

என் முதல் காதல் நீ..

என் முதல் காதல் நீ...

கவிதையாய் காதலை ஊருக்கே
சொன்னபோது, உனக்கு மட்டும்
சொல்லாமலே போனேன்...
கணவில்கூட கண்ணியம்
தவறாத ஆண் நீ...
நீ குழந்தையாய் அரைவனைக்கும்
அரைவனப்பில்தான் எவ்வளவு கதகதப்பு..
என் பெண்மையை மிக மென்மையாய்
என்னையறியாமல் தொட்டவன் நீ..
நேச மின்சாரத்தை நெஞ்சுக்குள்
பாய்ச்சிய மாவீரன் நீ...
உன் ஆண் வாசனையை வேறெதிலும்,
வேறெவெனிலும் நுகர்ந்ததில்லை நான்..
எஞ்சிய உன் ஸ்பரிசத்தில் இப்போதாவது
சொல்லிவிடுகிறேன்...
நீதான்...,
நீயேதான் என் முதல் காதல்..!!

வசீகரம்...

வசீகரம்... ❤

இந்த வார்த்தை தன் உச்சரிப்பிலேயே ஒரு வசீகரத்தை தன்னகத்தே கொண்டது. பூமியில் விழும் முதல் கதிரில் இருந்து கடைசியாய் படியும் இருள் வரை அனைத்திலும் ஒரு இனம்புரியா வசீகரம்..

வசீகரம் ஒரு காந்தம் போல. காந்தம் காந்தத்தை ஈர்காது.. அது போல இந்த வசீகரமும் எதிர்பாலரையே அதிகம் ஈர்க்கும். அதோட டிசைன் அப்படி.

கண்கள்தான் வசீகரத்தின் வாசல். பெண்களில் அதிகம் வசீகரிப்பது விழி, காதோர குறுமுடி, இதழ், புருவம், முகம், இடை இதர பல ரெஸ்ட்ரிக்கட் ஏரியா என உடல் சார்ந்தது. ஆண்களிடம் பெண்களுக்கு வசீகரிப்பது மீசை, முகம், குரல் இதை தாண்டி ராவான மேன்லினஸ், கம்பீரமான நடை, அலட்டி கொள்ளாத யதார்தம், அடங்காத திமிர் என உளவியல் சார்ந்தது.

யார்என்று தெரியாமலேயே சிலரை பார்த்தவுடன் ஒரு பிடித்தம் வரும்.. என்னதான் ரசிச்சாலும் வசீகரத்தின் அளவே அதன் இருப்பை தீர்மாணிக்கும். ரசனைக்கு வீரியமூட்டுவதுதான் இந்த வசீகரம்.. அதைதான் அழகு, கலை, ஈர்ப்பு, கவர்ச்சி, மோகம் என வரிசைபடுத்துகிறோம்..

சாதரணமாக பார்த்தால் நாம எல்லாருமே சுமார் மூஞ்சி குமாரு/குமாரி தான். ஆனா ரசனையின் வழியே பார்க்கும் போது நாம் ஒவ்வொருவரும் அழகன் அழகி... வசீகரம் ஒரு வினோத அறிவியல். கெமிஸ்ட்ரி வொர்கவுட் ஆனாலும் ஆகலன்னாலும் தன்னிச்சையா ரியாக்ஷன் நடந்துட்டே இருக்கும்..

நீங்கள் இந்த வசீகரத்தை கொண்ட பெண்ணாயின் சியர்ஸ்..😊வசீகரமுடைய ஆணாயின் லவ் யூ..

Monday 20 February 2017

காதலும்.., காதலிசமும்...

காதலும் காதலிசமும்.... 😘😍

உலகம் என்பது அறிவால் ஆனதல்ல அன்பால் ஆனது... நாம அறிவானவங்களா காட்டிக்க எப்போதும் மெனக்கிடுறோம் ஆனா அன்பா காட்டிக்க பலநேரத்தில் முனைவதில்லை... பிரபஞ்சம் காதலால் உருவானது, காதலால் நிரப்பபட்டது, காதலால் இயங்குவது இதில் நீங்களும் நானும் விதிவிலக்கல்ல...

ஓரு பூவின் மகரந்தம் எங்கோ இருக்கும் இன்னொரு பூவுடன் சேர்ந்து கனியாவது காதல்தான்... தன் குடும்பத்திற்கென சிறு சிறு மர துண்டை வைத்து அயராது உண்டாக்கும் ஒரு பறவையின் வீடும் காதல்தான்.. தன் குட்டிக்கும் சேர்த்து வேட்டையாடும் சிங்கத்தின் அன்பும் காதல்தான்... 

காதல் என்பது இன கவர்ச்சியை தாண்டி, வயது கோளாரை தாண்டி, பருவ கிளர்ச்சியை தாண்டி, ஹார்மோன் கலவரத்தை தாண்டி, சம்திங் ஃபிரம் யுவர் டீப் சோல்.  

எதையும் எல்லாரையும் காதலிக்க தெரிந்த இதயத்திற்கு ஆயு‌ள் அதிகம் ஆபாசம் குறைவு... காதலை புனிதபடுத்தும் நாம் காதலிப்பவர்களை புனித படுத்துவதில்லை.. கண்ணியமும் புரிதலும் காதலின் கிளைகள் என்றால் அன்கன்டிஷனல் லவ் மட்டுமே காதலின் ஆணிவேராக இருக்க முடியும்... 

காதலுக்கும் கல்யாணத்திற்க்கும் இடையே உள்ள தூரத்தில் உங்கள் காதலை முடித்து கொள்ளாதீர்கள். தள்ளாடும் வயதிலும் பின்னிருந்து கட்டி அனையுங்கள், கோபம் கொள்ளுங்கள், சிறிதாய் சண்டையிட்டு சமாதானம் ஆகுங்கள்.. நிலம், வானம் என தொடங்கி குடும்பம், குழந்தை வரை அனைத்தையும் திறந்த மனதுடன் காதலியுங்கள்.. காதல் ரசத்தை பருகிகொண்டே இருங்கள்... காயமில்லா காமமில்லா காதல் எதுவென்றால் கடல் அலையையும் கரையையும் உற்று பாருங்கள் புரியும்.  

தேடிக் கொண்டே இருங்கள் காதல் கடலை விட, வானத்தை விட, பிரபஞ்சத்தை விட பெரியது.. கீப் தி எக்சைட்மன்ட் அப்... வாழ்க்கைய வாழ எல்லோராலும் முடியும் ஆனால் கொண்டாட காதலால் மட்டுமே முடியும்.. 
Fall in Love, Stay Special in LOVE ... ❤❤ with loads of love!! Cheers!!